MIC News

கேமரன் மலை விவசாயிகளின் நலனுக்கு ஆதரவு தெரிவிக்கவே பதவி விலகச் சொன்னேன் -டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன்

கேமரன் மலை, டிச. 23-
கேமரன் மலை, கோலா தெர்லா இந்திய விவசாயிகளின் நலன் காக்கவும் ஆதரவு தெரிவிக்கவுமே பகாங் ம.இ.காவை பதவி விலகச் சொன்னதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.காவுக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்ற போதிலும் இனமானம் கருதி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரி, 11 ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினா செய்யச் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பாக வாட.ஸ்ஆப் புலனத்தில் வைரலாக பரவி வரும் குரல் பதிவில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையி் என் வீட்டில் சிறப்பு சந்திப்பு நடத்தப்பட்டு இணக்கம் காணப்பட்ட நிலையில் நான் நேரடியாக பகாங் சென்றிருந்தேன். ஆனால், இடையில் நடந்த சில குளறுபடியால் விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். இதனால் எல்லாமே பாழ்பட்டு விட்டதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இந்நிலையில் ம.இ.கா பலமுறை எடுத்துக் கூறியும் விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிய மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கின்றது. ஆகையால், மாநில பொறுப்புகளில் உள்ள அனைவரையும் தாம் பதவி விலகச் சொன்னதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

கடந்த தேர்தலில் அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக இப்போது அவர்களை பழி வாங்குவது நியாயமில்லை. விவசாயிகளின் பிரச்சினைகளை மாநில அரசின் பார்வைக்கு கொண்டு செல்லவே அந்த பதவிகள். ஆனால், அப்பிரச்சினை செவிசாய்க்கப்படவில்லை. விவசாயிகள் தீண்டப்பட்டு விட்டார்கள். ஆகையால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பதவி விலகுவதுதான் நல்லது

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண மஇகா நடத்திய போராட்டம் கொஞ்சமல்ல. மந்திரி புசார் வரை தேடிச் சென்றோம். இதில் ம.இ.காவை குறை சொல்பவர்கள் உண்மை தெரியாதவர்கள்.
இந்த விவகாரத்திற்கு தீர்வு காண பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்குள்ள விவசாயிகள் வேறு ஒருவரின் பேச்சை கேட்டுக் கொண்டு நீதிமன்ற வழக்கை நாடியதன் விளைவுதான் இன்றைய நிலை என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் விலக்கமளித்தார்.

மஇகா எப்போதும் இந்தியர்கள் பிரச்சினைக்கு குரல் எழுப்பும். ஆகையால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ம.இ.கா நடவடிக்கை மேற்கொள்ளும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

About the author

TheVoice

Add Comment

Click here to post a comment