MIC Puteri

இணைய அச்சுறுத்தல் உயிர் கொல்லியாக மாறக்கூடாது
புத்ரி தலைவி சமீ.ஹேமலதா வலியுறுத்து

கோலாலம்பூர், மே 23-
சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத பதிவுகளை பதிவேற்றம் செய்து  இணைய அச்சுறுத்தலை மேற்கொள்வதை அனைவரும் நிறுத்த வேண்டும் என்று தேசிய  ம.இ.கா புத்ரி தலைவி சமீ.ஹேமலதா தெரிவித்துள்ளார்.

சமூக வளைத்தளங்கள் வழி அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று  சமீ.ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இணைய அச்சுறுத்தல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆகக்கடைசியாக  திவ்யாநாயகி என்ற இளம் பெண் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு
சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருபவர் 20 வயது இளப்பெண் திவ்யா நாயகி. ஒரு போலி முகநூல் பக்கத்தில் இந்த இளம்பெண் செய்திருந்த டிக் டொக், புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிராக அவதூறுகள், தவறான விமர்சனங்கள் செய்யப்பட்டதால் மனமுடைந்து போன திவ்யாநாயகி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த இணைய அச்சுறுத்தல் காரணமாக தற்கொலை ஒன்றே முடிவு என்று கண்ணிசைக்கும் நேரத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்  சகோதரி திவ்யா நாயகி குடும்பத்தினருக்கு மஇகா புத்ரியின் சார்பில்  சமீ.ஹேமலதா ஆழ்ந்த  அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எதையும் பகிரலாம்; கருத்துத் தெரிவிக்கலாம் என்ற நிலை தற்போது  மாறிவிட்டது. திவ்யாநாயகி மரணம் இதற்கு ஒரு பாடமாக அமையட்டும். இதுப போன்ற பதிவுகளை யாரும் ஊக்குவிக்க வேண்டாம் என்று சமீ.ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபோன்ற அதிகரித்து வரும் இணைய வன்முறையை எப்படி கையாள்வது என்பது குறித்து வழக்கறிஞர் கல்பனாவுடன் தேசிய மஇகா தேசிய புத்ரி தலைவி சமீ.ஹேமலதா ஒரு நேர்காணல் நடத்தியுள்ளார். இதில் வழக்கறிஞர் கல்பனா பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளதாக சமீ.ஹேமலதா தெரிவித்தார்.

அதிகரித்து வரும் இணைய வன்முறையை எப்படி கையாலுவது என்பதை வழக்கறிஞர் கல்பனாவுடன் மஇகா தேசிய புத்திரி தலைவி சமீ.ஹேமலதா ஒரு நேர்காணல்


Puteri MIC’s heartfelt condolences to Thivya Nayagi’s family and friends on her demise This young girl had took her life away because of cyber bullying by a troll page and also due to the harsh comments on the said post. It has become a trend to troll anything and everything. Please do not encourage on the kind of postings. Make a report when you see one. You can make a difference.

And to all the girls out there, please take note that life is precious and suicide is not a solution for any problem.
Here is my conversation with Lawyer Kalpana Kumara on the above issues. I hope everyone would gain some beneficial info from this. Let’s put our hands together and say NO to cyber-bullying!

https://m.facebook.com/story.php?story_fbid=1496750507163717&id=100004863462162

About the author

Editor

Add Comment

Click here to post a comment