மு.வ.கலைமணி
ஜோர்ஜ்டவுன், டிச.3-
ம.இ.காவின் நற்சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உறுப்பினர்களின் கடமையாகும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
ம.இ.கா தற்போது ஆட்சியில் இல்லாது போதிலும் இந்திய மக்களுக்கு செய்ய வேண்டிய பல நல்லுதவிகளை செய்தே வருகின்றது என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.
பல நல்ல திட்டங்கள், குறிப்பாக எம்.ஐ.இ.டி மூலமாக சுமார் 45 ஆயிரம் டிப்ளோமா பட்டதாரிகளை ம.இ.கா உருவாக்கியுள்ளது.
ஏயிம்ஸ்ட் பல்கலைக்கழகம் நம் ம.இ.காவின் சொத்தாகியுள்ளது.
ம.இ.கா தலைமையக கட்டடத்தின் அருகில் உள்ள நிலத்தையும் ம.இ.கா மூலமாக வாங்கியுள்ளோம்.
எளியவர்களுக்கு தேடிச் சென்று உதவிகள் புரிந்து வருகின்றோம். இன்னும் எத்தனையோ நற்சேவைகள் நாடு தழுவிய அளவில் நம் ம.இ.காவினர் ஒவ்வொரு நாளும் செய்து வருகின்றனர் என்று பினாங்கு மாநில ம.இ.கா நடத்திய மேலவைத் தலைவருடனான ஒரு மாலைப் பொழுது நிகழ்வில் உரையாற்றுகையில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
இந்த விருந்து நிகழ்வில் அம்னோ, ம.சீ.ச, பாஸ் போன்ற கட்சிகளின்
தலைவர்கள் கலந்துக் கொண்டிருப்பது வரவேற்கக்கூடிய ஒன்று.
இக்கூட்டணி தொடர்கின்றபோது அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்கலாம்.
அதற்கான வேலைகளை நாம் இப்போதே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
பினாங்கு மாநிலம் போல் ஒவ்வொரு மாநிலமும் சொந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடும்போது பல வகையில் மக்களுக்கு உதவிடலாம் எனவும், மாநிலத் தலைவர் மற்றும் செயலவையினருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்ட அவர், தேசிய ம.இ.கா சார்பாக பினாங்கு மாநில ம.இ.காவின் செயல் நடவடிக்கைகளுக்காக 50 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக தெரிவித்த போது மண்டபம் அதிரும் வகையில் பெரும் கரவொலியை
எழுப்பப்பட்டது.
இதனிடையே,
50 புதியக் கிளைகள் மாநில அளவில் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தலைவரும் மாநில ம.இ.காவின் தொடர்புக் குழுத் தலைவருமான டத்தோ மு. ஞானசேகரன் தெரிவித்தார்.
By Desam -December 3, 2019