MIC News

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்- கவிப்பேரரசு வைரமுத்து மரியாதை நிமித்தம் சந்திப்பு

கோலாலம்பூர், டிச.3-எட்டாத உயரத்தில் மேலவைத் தலைவராக இருப்பதால்தான் மலேசிய மேலவையில் நிற்கும் எட்டாத வாய்ப்ப்பு தனக்கு கிட்டியுள்ளது என்று கவிப்பேரரசு வைரமுத்து மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மலேசியாவிற்கு தமிழாற்றுப்படை நூல் அறிமுகவிழாவில் கலந்து கொள்ள கோலாலம்பூர் வருகை தந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து இன்று டிசம்பர் 3 செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக மேலவைக்கு வருகைத் தந்து டான்ஸ்ரீ ச. விக்கேன்ஸவரனை சந்தித்தார் வைரமுத்து.

இச்சந்திப்பின்போது, மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டத்தோஸ்ரீ எம். சரவணன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ. இராஜேந்திரன், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, டான்ஸ்ரீ கே.எஸ். நல்லா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மலேசிய அரசியல் நிலவரம், தமிழக அரசியல் நிலவரம் உட்பட, இலக்கியம், கவிதை என பல்வேறு தகவல்களை மனம் திறந்து பேசினார்.
சென்னையில் நடந்த கலைஞர் விழாவில் கலந்து கொண்டேன். மேடையில் பேச என்னை அழைத்ததும் திக்குமுக்காடினேன். சரளமாக தமிழில் பேச முடியாது. இலக்கியம் குறித்து, இலக்கிய நயமாகப் பேச முடியாது. இதற்கெல்லாம் என் சகோதரர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நேர்மானவர் என்று டான்ஸ்ரீ விக்கேன்ஸவரன் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கவிப்பேரரசு வைரமுத்து, உங்களது பேச்சு சாமார்த்தியமான பேச்சு. பேச்சில் இரண்டு வகையுண்டு. ஒன்று ஆடம்பரம், அலங்காரப் பேசுவது. இரண்டாவது சாமார்த்தியமான பேச்சு. இதற்கு ஆடம்பரம் அலங்காரம் தேவையில்லை.
அதனால்தான் சபையில் உங்களது பேச்சு அனைவரையும் கவர்ந்தது என்றார்.

தாய்க்கு பெருமை சேர்த்த கவிதை எல்லாக் காலமும் நிலைத்து நிற்கும். அந்தக் காலத்தில் புலவர்கள், கவிஞர் பெருமக்கள் பாடிய, எழுதிய கவிதைகள் போன்று இக்காலத்தில் எழுத்தாலும், பேச்சாலும் தமிழ் மக்களை இலக்கிய பாசவலையில் கட்டிப் போட்டுள்ளீர்கள் என்று டான்ஸ்ரீ ச. விக்கேன்ஸவரன் பாராட்டினார்.

அந்தக் காலத்தில் கிராமப்புற தாய்மார்கள், அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வார்கள். இதற்குக் காரணம், காலரா, காய்ச்சல், நோய்கள், வெள்ளம், புயல், கிராமத்துச் சண்டைகள் என சில பிள்ளைகள் மடிந்து போனாலும், எஞ்சிய சில பிள்ளைகளாவது உடன் இருக்கும் என்ற அடிப்படையில்தான் தாய்மார்கள் அதிகப் பிள்ளைகளைப் ஈன்றெடுத்தார்கள்.

இன்றையக் காலக்கட்டத்தில் ஒரு பிள்ளைப் போதும் என நவீனமய சிந்தனையில் தாய்மார்கள் மாறி விட்டார்கள் என்று குறிப்பிட்ட கவிப்பேரரசு, எல்லாம் மாறலாம் ஆனால் மரபணு மட்டும் மாறாது என்றார்.

என் குடும்பத்தில் தாத்தாவிற்கு கொஞ்சம் கையெழுத்து மட்டும்தான். என் தந்தைக்கு கொஞ்சம் படிப்பறிவு – எழுத்தறிவு. இந்தக் குடும்பத்தில் பிறந்த எனக்கு கவிதை, இலக்கியம் என தொடர்பு இருக்கிறது என்றார்

அதற்கு எனது மூதாதையர்கள் யாராவது கவிதை ஆர்வம் கொண்டர்களாக இருந்திருப்பார்கள். அந்த மரபணுவின் பயன்தான் இப்போது எனது கவிதை – இலக்கிய ஆற்றல். இதுதான் மரபணு தொடர்பு என்று மதிய உணவு விருந்தோம்பலின்போது கருத்துப் பரிமாற்றமும், எங்கும் கவிதை லயமாகவும் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.

By Desam -December 3, 2019