MIC News

ஏழை தாயின் வீட்டை மீட்டெடுத்து முத்திரை பதித்தார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், நவம்பர் 28-
ஏலத்திற்கு போகவிருந்த ஏழை தாயின் வீட்டை மீட்டெடுத்து முத்திரை பதித்துள்ளார் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்.

வீட்டை வாங்கி பல ஆண்டுகளாக வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்த திருமதி சிம்மாசலத்தின் துயரத்தை அறிந்து, ஏலத்திற்கு போகவிருந்த வீட்டை மீட்டு அந்த ஏழைத் தாயிடம் ஒப்படைத்தார் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்.

மஇகா தலைமையக அலுவலகத்திற்கு உதவி தேடி வந்த திருமதி சிம்மாசலத்தின் துயரத்தை கேட்டறிந்த நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவரது வீட்டு வங்கிக் கடனை அடைத்து, வீட்டை மீட்டெடுத்து, அந்த ஏழைத் தாயிடம் ஒப்படைத்தார்.

அந்த ஏழைத் தாயின் கண்ணீரை துடைத்துள்ள டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் ம.இ.கா இன்னும் மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நிரூபித்துள்ளார். ம.இ.கா மக்களுக்கு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு இதுவே பதிலாக அமையும் என்று ம.இ.காவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு இன்றளவும் உதவிக்கரம் நீட்டி வரும் மஇகா தனது உறுப்பினர்களின் நலனிலெம் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. பேரா மாநிலம், பாசீர் சாலாக் ம.இ.கா தொகுதியின் உறுப்பினரான திருமதி சிம்மாசலம் கட்சி உறுப்பினர் என்ற நிலையில் அவரின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், தனது சொந்தப் பணமாக வெ. 10,500 வழங்கி அந்த வீட்டுக் கடனைத் தீர்த்துள்ளார்.

வீட்டை மீட்க உதவிப் பெற்றுக் கொண்ட சிம்மாசலம் தாம் பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வந்த இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் உதவியை தனது வாழ்நாள் மறக்க முழுவதும் மறக்க இயலாது என்றும், அவருக்கு தாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மஇகாவின் வளர்ச்சிக்காக தமது இறுதி மூச்சுவரை பாடுபட போவதாகவும் சிம்மாசலம் தெரிவித்தார். மேலும், இந்த உதவியை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மஇகாவின் மகளிர் பகுதியின் தேசியத் தலைவர் திருமதி ஜெ.உஷாநந்தினி அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்

By Desam -November 28, 2019