Mi-Voice MIC News

இந்து சமயப் பிரச்சினைகளுக்கு மக்களின் ஆதரவு போதவில்லை: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர் :

இந்து சமயப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க மக்களின் ஆதரவு போதவில்லை என்று மஹிமாவின் உதவி தலைவர் டத்தோ சிவக்குமார் நடராஜா கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தைப் பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதே வேளையில் உலகின் பல நாடுகளில் வாழும் இந்து மக்கள் இப்பிரச்சினைக்குக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள 28 இந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து இங்குள்ள இந்திய தூதரகத்தில் மகஜர் வழங்கினர்.

மஹிமா சார்பில் அதன் துணைத் தலைவர் செல்வம் மூக்கையா, உதவித் தலைவரான நானும் கலந்து கொண்டேன்.

அனைத்து இயக்கங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்தனர். ஆனால் மக்களிடமிருந்து பெரிய ஆதரவு இல்லை.

ஒரு பிரச்சினை என்றால் சமூக வலைத் தளங்களில் தான் அதிகமாகப் பேசுகிறார்கள்.

ஆனால் நேரடியாக வந்து ஆதரவு தருவது இல்லை. இந்நிலை மாற வேண்டும்.

இந்து சமயத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டும்.

இதற்கு டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான மஹிமா என்றும் துணை நிற்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

https://nambikkai.com.my/detail/17765