பிரதமர் தான்ஶ்ரீ முகிடின் யாசின் முன்னெடுத்திருக்கும் அணுகுமுறை மிகச் சரியானது. பெரும்பான்மையை இழந்தால் ஒருவர் செய்யவேண்டியதைதான் அவர் செய்கிறார் என மஇகா தலைவர் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
”நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்வதற்கு வழிகள் உள்ளன.”
”ஆனால் அவர் பெரும்பான்மை இல்லை எனத் தேசிய ஊடகம் வாயிலாகக் கூறிவிட்டார். அதோடு அனைத்து தரப்பினரும் அவர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள். இது வழக்கமான நம்பிக்கை வாக்கெடுப்பு முறையை மீறியுள்ளது” எனத் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியதாக ஃபிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக தேசிய கூட்டணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கத் தாம் பிரதமரை நேற்று சந்தித்ததாகக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன், அவர் பதவி விலகும் கடித்ததை ஒப்படைக்க விருப்பதாகத் தம்மிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
”இந்த இக்கட்டான் சூழ்நிலையிலும் மக்களுக்குத் தம்மால் இயன்றதை செய்ய முற்படுவதாகவும் கூறினார்.”
“அவர் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக ஒப்புக் கொண்டதால், அரசியலமைப்பின் கீழ் இது மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.”
இந்நிலையில் யார் தலைமையேற்று வழிநடத்த வேண்டுமென்பதை மாமன்னர் முடிவு செய்வார் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
”மஇகாவை பொறுத்தவரை நாங்கள் தேசிய முன்னணியுடன் தான் இருக்கின்றோம். எங்களின் வழியை நாங்கள் மாற்றவில்லை.”
”நாங்கள் கூட்டணியின் தொடர்ந்து இணைந்திருப்போம். இறுதியில் மக்களுக்கு எது முக்கியமோ அதை முன்னெடுக்கும் பாதையில் பயணிப்போம். நாளை என்ன நடக்கின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
மலேசியாவின் 8ஆவது பிரதமர் தான்ஶ்ரீ முகிடின் யாசின் நாளை தமது பதவி விலகம் கடிதத்தை மாமன்னரிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது
Add Comment