ஷாஆலம்:
வெள்ளப் பேரிடரில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக மஇகாவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நாட்டில் பெய்த அடை மழையின் காரணமாக சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசுப்பிரதேசம், நெகிரி செம்பிலான் உட்பட பல்வேறு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் தங்களின் இருப்பிடம், உடைமைகளை இழந்து நிவாரண மையங்களில் தங்கி வருகின்றனர்.
இதில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஷாஆலம் ஸ்ரீமூடா, கோத்தா கெமுனிங், உலு லங்காட், கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளில் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இப் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்புடன் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாராண மையங்கில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பா ஷாஆலம் ஸ்ரீ மூடா, கோத்தா கெமுனிங் பகுதியில் உள்ள மக்களை மீட்பதுடன் அவர்களுக்கு உரிய உதவிகளை மஇகாவினர் வழங்கி வருகின்றனர்.
டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் தலைமையில் உயர்மட்ட தலைவர்கள், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவினர், இளைஞர் படையினர் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இரவு பகல் பாராமல் அவர்கள் களப் பணி ஆற்றிவருகிறார்கள். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதோடு இல்லங்களை சுத்தம் செய்யும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.



எமரல்ட் தமிழ்ப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாராண மையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவுகள், உடைகள், மருத்துவ உதவிகள் என அனைத்தையும் மஇகாவினர் வழங்கி வருகின்றனர்.
இதே போன்று நாட்டில் இதர பகுதிகளிலும் மஇகாவினர் தொடர்ந்து தங்களின் சேவைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add Comment