MIC Youth

வெள்ளப் பேரிடர் : களத்தில் இறங்கிய ம.இ.கா. இளைஞர் பிரிவு !

கிள்ளான் | 20/12/2021 :-

வெள்ளப் பேரிடரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா. இளைஞர் பிரிவும் பணிப்படையும் உதவி புரிந்து வருகின்றன.

கடந்த மூன்று நாட்களாக கோத்தா ராஜா, காப்பர், கிள்ளான் பகுதிகளில் அதன் உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளாக, உணவு, படகு, உறைவிடம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருகிறது என ம.இ.கா. உச்சமன்ற உறுப்பினரும் பேரிடர் உதவிக் குழுவின் தலைவருமான சுந்தர் குப்புசாமி தகவல் அளித்தார்.

மிக முக்கியமாகப் படகுச் சேவஐ உதவியை கோத்தா ராஜா, காப்பர், கிள்ளான், சிப்பாங், உலு லங்காட் ஆகியப் பகுதிகள் வழங்கி வருகின்றனர்.

மேலும், சிலாங்கூர் தமிழ் இளைஞர் மணிமன்றமும் ம.இ.கா. சிலாங்கூர் இளைஞர் பிரிவும் இன்று உணவுப் பொட்டலங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவினர்.

இதனிடையே, கம்போம் காசிப்பிள்ளை, ஜாலான் கோலாம் ஆயேர் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட்டரசுப் பிரதேச ம.இ.கா.இளைஞர் பிரிவு உணவுப் பொருட்கள் கொடுத்துதவினர். இவர்களுக்குக் கை கொடுத்த கூட்டரசுப் பிரதேச இந்தியர் இடுகாட்டு அமைப்பினருக்கு கூட்டரசுப் பிரதேச ம.இ.கா.இளைஞர் பிரிவு நன்றியினைத் தெரிவித்தது.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியைத் தவிர்த்து, நெகிரி செம்பிலான் ஜெலெபுவிலும் ம.இ.கா. பணிப்படை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைத் தேவைக்கானப் பொருட்கள் கொடுத்து உதவி இருக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிது என்பதால் அதிக உதவி தேவைப்படுகிறது. பணமோ பொருளோ, எந்த உதவியானாலும் ம.இ.கா. தலைமையகத்தில் அமைந்துள்ள இளைஞர் பிரிவு அலுவலகத்திலோ அல்லது சிலாங்கூர் மாநில ம.இ.கா.இளைஞர் பிரிவு தலைவரையோ தொடர்பு கொள்ளலாம் என சுந்தர் கூறினார்.

வெள்ளம் வற்றியவுடன், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்து கொடுக்கவும் ம.இ.கா. இளைஞர் பிரிவு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.