Mi-Voice MIC News

பெர்கேசோ மானியங்களை தவறாகப் பயன்படுத்துவதை மனிதவள அமைச்சு கடுமையாகக் கருதுகிறது
சம்பந்தப்பட்ட முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
டத்தோஸ்ரீ எம்.சரவணன் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 19- மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பெர்கேசோ மானியங்கள தவறாகப் பயன்படுத்தப்படுவதை மனிதவள அமைச்சு கடுமையாகக் கருதுவதால்
சம்பந்தப்பட்ட முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெர்கேசோவின் மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பில் இன்று இயங்கலை வழி நடத்திய ஊடகவியளார் சந்திப்பில் டத்தோஸ்ரீ சரவணன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சொக்சோ தொடர்பான தவறான விண்ணப்பங்களை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லா விண்ணப்பங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறலாம். பெஞ்சானா 2.0 விண்ணப்பங்களில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பாக ஆவண மோசடி செய்த சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து காவல் துறை விசாரணையோ அல்லது ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையோ மேற்கொள்ளப்படலாம் என்று சரவணன் தெரிவித்தார்.

வேலை செய்யாத தொழிலாளர்கள் இன்னும் வேலை செய்வதாக கையொப்பத்துடன் தகவல் அனுப்புவது, இதுவரை வேலையே செய்யாதவர்களின் தகவல்களை அனுப்பி ஊதிய ஊக்குவிப்புத் திட்டத்தில் மானியம் பெறுதல் போன்றவை தொடர்பில் இதுவரை 1,758 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் 1231 புகார்கள் ஆதாரமற்றவை. 340 புகார்கள் உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 187 புகார்கள் இன்னும் விசாரணையில் உள்ளன.

இதுகுறித்து மேல் விவரங்களுக்கு அல்லது புகார் செய்ய திரையில் காணும் தொடர்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

PERKESO 1-300- 22-8000 அல்லது 03 80915300
மின்னஞ்சல் முகவரி penjanakerjaya@perkeso.gov.my

https://m.facebook.com/story.php?story_fbid=1136755813470513&id=324916217987814