Mi-Voice MIC News

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை நீட்டிப்பு, பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா, ஏப்ரல் 10: கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ முகிதின் யாசின் சற்றுமுன் அறிவித்தார்.

கோவிட்-19 பரவலை முழுமையாக கட்டுப்படுத்தி, மக்களின் அன்றாட நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புவதை உறுதி செய்யும் நோக்கில் இந்நீட்டிப்பு அமைவதாக பிரதமர் நேரலை வாயிலாக மக்களுக்கு தெரிவித்தார்.

https://www.thesentral.my/2020/04/10/tamil-mco-extended-28april/