Mi-Voice MIC News

(வீடியோ பதிவு) பிரிவினை, காழ்ப்புணர்ச்சி வேண்டாம்; சவால்மிக்க இக்காலக்கட்டத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – டத்தோஸ்ரீ எம். சரவணன்

கோலாலும்பூர், மார்ச் 27: கோவிட்-19 நோய்ப்பரவலினால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் சவால்மிக்க இக்காலக்கட்டத்தில், மலேசிய இந்திய சமுதாயம் பிரிவினை, விதண்டாவாதங்களைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என மனிதவள அமைச்சரும், ம.இகா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

“இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள மலேசியர்கள் நாடு திரும்ப இயலாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல. இந்தியாவில் இருந்து கட்டம் கட்டமாக மலேசியர்களை தாயகம் கொண்டு வர ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் முழு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அதையறியாமல், தவறான நோக்கோடு சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்புவதை பொறுப்பற்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது வீடியோ பதிவில் மேலும் கூறினார்.

“கடந்த கால காழ்ப்புணர்ச்சி, பேதங்களை மறந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கோவிட்-19-இன் தாக்கங்கள், பொருளாதார சவால்களிலிருந்து நமது சமுதாயம் மீள இயலும். பிரதமர் அறிவிக்கும் பொருளாதார மீட்புத் திட்டத்தினை சமுதாயம் முறையாக பயன்படுத்த வேண்டும்,” என அமைச்சர் மேலும் கூறினார்.

முழு வீடியோ பதிவு கீழே:

https://www.thesentral.my/2020/03/27/tamil-dsmsaravanan-community-stayunited/