குணாளன் மணியம்
பத்துமலை, நவ.23-
இந்தியர்கள் இருதய நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இருதய நோய் தற்போது பலரையும் பரவலாக பாதித்து வருகிறது. இதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. ஆகையால், இந்தியர்கள் இருதய நோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்துமலை தமிழ்ப்பள்ளியில் சமூக வியூக அறவாரியம்-தேசிய இருதய கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “இருதயத்தை நேசிப்போம்” கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாமில் உரையாற்றுகையில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு சொன்னார்.
பத்துமலை தமிழ்ப்பள்ளியில் சமூக வியூக அறவாரியம்-தேசிய இருதய கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “இருதயத்தை நேசிப்போம்” கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாமில் உரையாற்றுகையில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு சொன்னார்.
பல நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இருதய ஏற்படுகிறது. ஆனால், மலேசியாவில் சிறியவர்களுக்கும் இருதய நோய் வருவது வருத்ததமளிக்கிறது. இதற்கு இருதய நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் இருதய நோய் குறித்து விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும். இருதய நோய் இருப்பது உண்மையானால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இருதய நோய் வந்த பின் அவதிப்படுவதை காட்டிலும் வரும் முன் காப்பது மிகவும் நல்லது என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
இந்த இருதய மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் இருதயத்தை பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சமூக வியூக அறவாரியத் தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ டி.மோகன், சிலாங்கூர் ம.இ.கா தலைவர் எம்.பி.ராஜா, சிப்பாங் ம.இ.கா தலைவர் குணாளன், டத்தோ முனியாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
By Desam -November 23, 2019