இங்குள்ள தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனைக்கு கொள்கலன் பிணவறையை மலேசிய இந்தியர் காங்கிரஸ் உதவியாக வழங்கியுள்ளது.
அதிகரித்துள்ள கோவிட்-19 நேர்வுகளாலும் இறப்புகளாலும் இந்த மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை அநேகன் உட்பட பல ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.
அந்த உதவி தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி வழங்கியதை தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனை தமது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் மாவட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனைக்கு கொள்கலன் பிணவறை வழங்கி உதவி புரிந்த ம.இ.கா.வுக்கு தமது நன்றியினை அது தெரிவித்ததாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தொடக்கக் கட்டத்தில் ம.இ.கா.வின் அந்த உதவி மறுக்கப்பட்டிருந்தது.
அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஸுல்கர்னியான் முகம்மட் இரவி ந்த உதவியை மறுத்ததாக நேற்று ஒரு டிக்டோக் காணொலியில் முகம்மட் அஸார் ஓஸ்மான் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டவர் தெரிவித்திருந்தார்.
அந்த உதவியை மறுநாள் பெற இருப்பதால் அந்த உதவிஅயி மறுத்ததாகக் காரணாம் கொடுக்கப்பட்டதாக முகம்மட் அஸார் ஓஸ்மான் அந்தக் காணொலியில் குறிப்பிட்டிருந்தார்.
ரி.ம. 35,000 மதிப்புள்ள அந்த கொள்கலன் மருத்துவமனைக்கு உதவி செய்யும் நோக்கில் வாங்கப்பட்டது. முதலில் அந்தக் கொள்கலனைப் பெற்றுக் கொள்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. மூன்றூ மணி நேரம் கழித்து அது மறுக்கப்பட்டது. மறுநாள் சுமார் 8 கொள்கலன்கள் அம்மருத்துவமனை கிடைக்கபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்தக் காணொலி நீக்கப்பட்டது. பின்னர், பதிவேற்றப்பட்டப் புதியக் காணொலியில், அந்த விவகாரம் சுகாதார அமைசச்சின் தலையீட்டால் தீர்வு காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டது.
இறுதியில், அந்தக் கொள்கலன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. தடயவியல் பிரிவுக்கு முன் அந்தக் கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த சுகாதார அமைச்சு, அதன் தலைமை இயக்குநர், அமைச்சர் டாக்டர் அடாம் பாபா, மருத்துவமனையின் இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலை சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா உறுதிப்படுத்தினார்.
முதற்கட்டத்தில் அந்தக் கொள்கலன் பிணவறை உதவி ம.இ.கா.விடம் இருந்து தான் கிடைக்கப்பெற்றது எனும் தகவல் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனையின் அந்த முகநூல் பதிவுக்குப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Add Comment