ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 8 ஆயிரம் மக்கள் திரண்டனர் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டதற்கு பக்காத்தானுக்கு நன்றி சொல்லிக் கொள்வதாக டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர்களின் செயல்பாடு ம.இ.காவிற்குப் புத்துயிர் கொடுத்துள்ளது. பக்காத்தானில் உள்ள கட்சிகள்போல் நாங்க பல்லின கட்சி இல்லைங்கோ… நாங்க இந்திய சமுதாயத்தின் கட்சி. பக்காத்தானைப் பொருத்தவரை இந்திய சமுதாயத்திடம் அள்ளிவிடுவார்கள். ஆனால் செய்யமாட்டார்கள் என்பது அவர்கள் நடவடிக்கையில் நிரூபணம் ஆகியிருக்கிறது.
ம.இ.கா-வை ஒழித்துகட்டுவோம் எனக் குறையாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள். இன்று ஒன்னுமே செய்யமுடியாமல் போனதால், ம.இ.காவே மேல் என மக்களிடத்தில் அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார்கள். ம.இ.கா எப்போதும் பலம் மிக்க கட்சி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் கட்சியின் பலத்தைக் கொண்டு இந்திய சமுதாயத்திற்கு வேண்டிய கல்வி, சமூகநல உதவிகளைச் செய்கின்றோம்
இப்போது சொஸ்மாவில் பிடிபட்டவர்களுக்கு நாங்கள் உதவியதற்குக் காரணம் அவர்களும் நம் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதால்தான். அவர்களை ஜ.செ.க, பி.கே.ஆர் என்று நாங்கள் பார்க்கவில்லை. தமிழர்கள் என்கிற காரணத்தால், இந்தத் தாய்க் கட்சி உதவி வழங்கியது, வழங்கும் என டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.இந்திய சமுதாயம் எங்களைத் தலையில் வைத்து கொண்டாடினாலும், இல்லை திட்டினாலும் எங்கள் கடமை தொடரும். ம.இ.கா எப்போதும் திறந்த இல்ல உபசரிப்பை தீபாவளி அன்று விமர்சையாக நடத்தும். இம்முறை ஆட்சியில் இல்லை என்றாலும், நாங்கள் 5000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்து ஏற்பாடுகளைச் செய்தோம். ஆனால், இறுதி நேரத்தில் உணவு மற்றும் மற்ற மற்ற எற்பாடுகளை அதிகரித்தோம்.
மக்கள் கூட்டம் வந்தவண்ணமாக இருந்ததைக் கண்டு முன் ஏற்பாட்டை செய்தோம். சுமார் 8000 ஆயிரம் மக்கள் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் திரண்டது இந்திய சமுதாயம் எப்போதும் தாய்க் கட்சியுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாட விரும்புகிறது என்பதைல் பிரதிபலிக்கிறது. குடும்பத்தில் சண்டை வரும். ஆனால், உறவு திரும்ப ஒன்றுசேறும்.
அதேபோல் இந்திய சமுதாயம் ம.இ.கா மீது கோபம் கொண்டது உண்மைதான். ஆனால் நமக்காக நம் தாய்க் கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கையோடு இன்று இணைந்துள்ளனர். இது பக்காத்தானுக்கு ஓர் எச்சரிக்கை. இனியாவது இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளைக் கவனியுங்கள் அது உங்களுக்கு நல்லது. கவனிக்காமல் மெத்தனமாக இருந்தால் அது எங்களுக்கு நல்லது என, பக்கத்தான் தலைவர்களுக்கு டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்தார்!
வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் அக்டோபர்-3