Mi-Voice MIC News

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் – தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து.

கோலாலம்பூர், ஏப்.13-
இந்நாட்டில் இந்தியர்களின் கலாச்சாரம், மொழி வேறாக இருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என்று சித்திரைப் புத்தாண்டு, விஷுப்புத்தாண்டு, வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்துயுள்ளார்.

இந்நாட்டில் காலங்காலமாக மொழி, கலாச்சாரம் மாறாமல் தத்தம் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒற்றுமையாகக் கொண்டாடி வரும் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள் என்று அனைவரின் கலாச்சாரம், மொழி உணர்வுக்கு மதிப்பளிப்போம் என்று இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.

நாம் அனைவரும் இந்தியர் என்ற அடிப்படையில் ஒற்றுமையோடு இந்த புத்தாண்டுகளை கொண்டாட வேண்டும். மொழியும் கலாச்சாரமும் நம்மை பிரித்தாலும் இந்தியர் என்ற உணர்வு நம்மனதில் மேலோங்கி இருக்க வேண்டும். இந்தப் புத்தாண்டுகள் அனைவருக்கும் நன்மையைக் கொண்டு வர வேண்டும். தெலுங்கு சமூகத்தினர் அண்மையில் உகாதி பண்டிகையை கொண்டாடினர். தெலுங்கு மக்கள் அனைவருமக்கு உகாதி சுபகாஞ்சலு. இந்த உகாதி பண்டிகை அனைவருக்கும் சுபஆண்டாக அமைய வேண்டும்.

அதேநேரத்தில் தமிழர்கள் ஏப்ரல் 14 வியாழக்கிழமை சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். மலையாள சமூகத்தினர் விஷுப்புத்தாண்டையும் ஏப்ரல் 15இல் சீக்கியர்கள் வைசாக்கி புத்தாண்டையும் கொண்டாடுகின்றனர்.
புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு விழா என்பதால் அனைவரும் ஒற்றுமையாக இதனை கொண்டாட வேண்டும்.
இந்த ஆண்டு இந்தியர்களின் அனைத்து புத்தாண்டுகளும் ஒருசேர கொண்டாடப்படுவது ஒரு சிறப்பு அம்சமாகும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

இந்நிலையில் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் தமிழர்கள் மற்ற புத்தாண்டை கொண்டாடும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
இந்த புத்தாண்டுகள் அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் உறவை வலுப்படுத்த வேண்டும். ஒற்றுமையை கொண்டு வர வேண்டும். அந்த வகையில் சித்திரைப் புத்தாண்டு, விஷுப்புத்தாண்டு, வைசாக்கி ஆகிய புத்தாண்டுகள் இனங்களுக்கு இடையில் உறவை வலுப்படுத்தும் என்று நம்புவோம். சித்திரைப் புத்தாண்டு, விஷுப்புத்தாண்டு, வைசாக்கி புத்தாண்டுகளை கொண்டாடும் அனைவருக்கும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

About the author

Editor

Add Comment

Click here to post a comment