Mi-Voice MIC News

Maju Institute of Educational Development (MIED) is an educational arm of the MIC.

H.E. YBhg Tan Sri Dato Sri DR SA Vigneswaran, Chairman of MIED today handed over RM2,694,442.00 in scholarships and loans to 230 deserving Malaysian students. Out of which 55% are underprivileged students from families with a monthly household income of RM5,000.00 and below.

Since 1984 MIED have disbursed RM169,871,579.79 to 12,487 students in our intention to fulfill the dreams and hopes of aspiring students.

MIED will continue to focus on building confidence in education among students, a significant proportion of whom hail from underprivileged backgrounds.

மாஜூ கல்வி மேம்பாட்டு கழகம் (எம்.ஐ.இ.டி) – ம.இ.காவின் கல்வி நிறுவனம்

ம.இ.காவின் தேசியத் தலைவரும், எம்.ஐ.இ.டி வாரியத் தலைவருமான மதிப்புமிகு தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்கள் இன்று ரிங்கிட் 2,694,442.00 மதிப்பிலான கல்வி கடனுதவி மற்றும் உபகார நிதியினை 230 மாணவர்களுக்கு வழங்கினார். இம்மாணவர்களில் 55 விழுக்காட்டினர் ரிங்கிட் 5,000-கும் குறைவான மாத வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஆவர்.

1984-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது முதல், மாணவர்களின் உயர்க்கல்வி கனவுகளை நனவாக்கும் நோக்கில் எம்.ஐ.இ.டி இதுவரை 12,847 மாணவர்களுக்கு மொத்தம் ரிங்கிட் 169,871,579.79 கல்வி நிதியினை வழங்கியுள்ளது.

இந்திய மாணவர்கள், குறிப்பாக குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் தங்கள் உயர்க்கல்வி இலட்சியங்களை அடைந்திட எம்.ஐ.இ.டி தொடர்ந்து உறுதுணையாக விளங்கும்.