Mi-Voice MIC News

ஒருமுறை விட்டுக்கொடுத்தால் அதுவே பழக்கம் ஆகும்…. தைப்பூசத்தை நிறுத்த மாட்டேன்! – டத்தோ ஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், ஜனவரி-10:

மலேசியத் திருநாட்டில் இந்துக்கள் அதிகமாகக் கொண்டாடி வரும் பெரு விழா என்றால் அது தைப்பூசம்தான்.

தைப்பூசத்தை நிறுத்தவேண்டும் என நம்மவர்கள் சிலர் உட்பட, இன்னும் சில தரப்பிரனர் கோவிட்-19 தாக்கத்தைக் காரணம் காட்டி முயற்சி செய்கின்றனர் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

மலேசிய இந்து மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். ஒரு முறை விட்டுக்கொடுத்தால் நாளை அதுவே பழக்கம் ஆகி, நமக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கும்.

அதனால்தான் கடந்த ஆண்டு தைப்பூசம் ரத்து செய்யப்படமால் ரத ஊவர்லம் மற்றும் எளிமையான தைப்பூசக் கொண்டாட்டத்தை பி.கே.பி காலத்தில் நடத்தினோம். எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தவில்லை.

இந்த முறையும் எத்தனை தடைகள் வந்தாலும் தைப்பூசம் நிறுத்தப்படாது. சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. பிறகு வரும் காலத்தில் ஒவ்வொன்றுக்கும் நாம் அனுமதி வாங்க வேண்டிய சூழல் எற்படும் என மலேசிய இந்து ஆலய இந்து அமைப்புகளின் பேரவைக்குத் தலைமை தாங்கி பேசுகையில் அமைச்சர் சரவணன் இவ்வாறு தெரிவித்தார்!