கோலாலம்பூர், டிசம்பர்-12
எதிர்வரும் 15 வது பொதுத் தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் பாரம்பரியத் தொகுதிகளில் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகள் போட்டியிடாது என தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெற்றுள்ளது. ஆகையால் நமது அரசியல் சிந்தனையும் மாறவேண்டும். நமக்காக உழைத்த தோழமைக் கட்சிகளின் அர்ப்பணிப்பை நாம் மதிக்க வேண்டும். அந்த வகையில் தோழமைக் கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பாக இந்திய தோழமைக் கட்சிகளுக்கு வழங்கப்படும். ஆனால், அது ம.இ.காவின் பாரம்பரிய இடம் கிடையாது என ம.இ.காவின் 75 வது பொதுப் பேரவையில் டத்தோ ஸ்ரீ ஷாஹிட் திட்டவட்டமாகத் தெரிவித்தார்!
Add Comment