Mi-Voice MIC News

ம.இ.கா.வின் 74வது பொதுப் பேரவை மெய்நிகர் முறையில் நடைபெறும் !

கோலாலம்பூர் | மார்ச் 30:-

ஏதிர்வரும் ஏப்ரல் 3ஆம் நாள் மலேசிய இந்தியர் காங்கிரசின் 74வதுப் பொதுப் பேரவை மெய்நிகரின் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ அசோஜன் இன்று ம.இ.கா.வின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அறிவித்தார்.

ம.இ.கா.வின் சட்ட அமைப்பு விதி 71இன் படி, அக்கட்சியின் 74வது பொதுப் பேரவை இவ்வாரம் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கிள்ளானில் உள்ள வின்தம் அக்மார் தங்கும் விடுதியில் நடைபெற உள்ளது.

இந்தப் பொதுப் பேரவையில் தொகுதித் தலைவர்கள், தொகுதித் துணைத் தலைவர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்பது ம.இ.கா.வின் விதிமுறையாகும். இவர்களுடன் மத்தியச் செயற்குழு உறுப்பினர்களும் இப்பேரவையில் கலந்து கொள்வர்.

அதே வேளையில் தொகுதிகளைச் சேர்ந்த தேர்தெடுக்கப்பட்ட மற்றப் பேராளர்கள் தங்களது மாநில ம.இ.கா.வால் முடிவு செய்யப்பட்ட இடத்தில் மெய்நிகர் வாயிலாகக் கலந்து கொள்வர்.

ம.இ.கா.வின் 86.1 சட்ட விதிப்படி, தொகுதிக் காங்கிரசில் இருந்து குறைந்தது 30% தேர்ந்தெடுக்கப்பட்டப் பேராளர்கள் இப்பொதுப் பேரவையில் கலந்து கொள்ள வேண்டும். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் அதன் விதிமுறைகளையும் பின்பற்றும் வகையில் புதிய வழக்கில் இந்தப் பொதுப் பேரவை நடக்கவுள்ளது.

” மேலும், ம.இ.கா.வின் மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி ஆகியப் பகுதிகளின் பேராளர்கள் மாநாடுகளும் பொதுப் பேரவை நடைபறுவதற்கு முந்தை நாள் ஏப்ரல் 2ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அதே  வின்தம் அக்மார் தங்கும் விடுதியில் நடைபெற உள்ளது. “

பேராௐஅர்களுக்கு 2019/2020 ஆம் ஆண்டறிக்கையும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையும் மின்னியல் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மெய்நிகர் பேரவையில் ம.இ.கா.வின் தேசியத் தலைவரின் கொள்கையுரை மீதிலான விவாதமும் நடைபெறும். மாநிலத்தில் இருந்து கலந்து கொள்ளும் பேராளர்களும் இந்த நிழல்நிலைப் பேரவையில் நடைபெறும் விவாதத்தில் நேரடியாகப் பங்கு பெறலாம்.

எனவே, இப்பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும் அனைத்துப் பேராளர்களும் மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி ம/இ.கா.வின் தலைமைச் செயலாளர் டத்தோ அசோஜன் குறிப்பிட்டார்.

பொதுப் பேரவை நடைபெறும் இடங்கள்

முதன்மைப் பொதுப் பேரவை – வின்தம் அக்மார் தங்கும் விடுதி, கிள்ளான்

ஜோகூர்– CIMB LEADERSHIP ACADEMY,
Persiaran Medini, 79100 Johor.

மலாக்கா – BAYU LAGOON PARK RESORT,
Jalan Wakaf Utama Bukit Katil, 75450 Melaka.

நெகிரி செம்பிலான் – WISMA MIC SEREMBAN, 
65, Jalan Tuanku Antah, 70100 Seremban

பேரா – HOTEL IMPIANA CASUARINA,
18, Jalan Raja Dr Nazrin Shah (Jalan Gopeng), 30250 Ipoh.

பகாங் – ALH CONTINENTAL RESORT,
No, 8, Lorong Bnedera 1F, Jalan Bukit Bendera, 28400 Mentakab, Pahang.

பினாங்கு – THE LIGHT HOTEL,
Lebuh Tenggiri 2, Bandar Seberang Jaya, 13700 Pualau Pinang

பெர்ளிஸ் & கெடா – CINTA SAYANG RESORT,
Persiaran Cinta Sayang, 08000 சுங்கை பெட்டானி, கெடா.

கூட்டரசுப் பிரதேசம் கோலாலம்பூர் & சிலாங்கூர் ,
PT 7, Jalan Ipoh, Pekan Lama Batu 7, 68100 Batu Caves, Selangor.

http://www.anegun.com/?p=45517

About the author

Editor

Add Comment

Click here to post a comment