Mi-Voice MIC News

டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் என்றென்றும் ஒரு வெற்றியாளர்! -எஸ்.பி. மணிவாசகம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4-

அரசியல் பயணத்தில் 8 இளைஞர் தலைவர்கள் கீழ், முறையாக டி.பி. விஜேந்திரன், கே.எஸ். பாலகிருஸ்ணன், டத்தோ எம்.செல்லத்தேவன், டத்தோ எஸ்.எஸ்.இராஜகோபால், சுப்ரமணியம் @ சிட்டி மணியம், இன்ஞினியர் முத்தையா, டத்தோ நெல்சன் ஆகியோரோடு எட்டாவது தலைவராக டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனோடு பனியாற்றியது வரலாற்றுப் பதிவாகும்.

குறிப்பாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரனோடு, அவர் இளைஞர் பகுதிச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் உயர்ந்த பொழுதும் அவரோடு பொருளாளராக செயல்பட்டது ஒரு வரலாற்றுச் சகாப்தமாகும்.

அந்த வகையில் டான்ஶ்ரீயோடு அணுக்கமாகச் செயல்பட கிடைத்த வாய்ப்பினை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுவதாக மஇகாவில் நீண்ட காலச் சேவகர், சமூக ஆர்வலர், மலேசிய எம்.ஜி.ஆர். நற்பணி மையத்தின் தலைவர்
எஸ்.பி. மணிவாசகம் குறிப்பிட்டார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறித்து அவர் பேசியதாவது:

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் எஸ்.பி.மணிவாசகம்

அன்றிலிருந்தே எந்த நடவடிக்கைகளிலும் வெற்றியாளராகவே ஜொளித்துள்ளார்.

இளைஞர் பிரிவில் ஒரு வேங்கையாய் துணிச்சலுடன் புறப்பட்டு செயல்பட்டார் என்பது வெள்ளிடைமலை.

எட்டுத் தலைவர்களும் தங்கள் பாணியில் செயல்பட்டு தங்கள் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, தமது பாணியில் ஒரு மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் என்றால் மிகையாது.

4,000 பிரிகேட் பெமுடாவை (இளைஞர் படையினை) டேவான் மெர்டேக்காவில், துன் சாமிவேலு முன் தொடங்கியது ஒவ்வொரு இளைஞனும் மார் தட்டி என்றும் பெருமிதம் கொள்ளும் வரலாற்றுப் பதிவாகும். டான்ஶ்ரீ விக்னேஸ்வரனோடு துனண நின்று செயல்பட்டது என்றும் இனிய நினைவுகளாகும்.

இளைஞர் நடவடிக்கைகளுக்கு நிதி சேர்க்க தரையிறங்கி செயல்பட்ட ஒரு உண்மையான தலைவன் என்ற பெருமை டான்ஶ்ரீ விக்னேஸ்வரனையே சாரும்.

சாலையில் கடை கடையாக அவருடன் பொருளாளராக, அவர் முன் செல்ல அவரை பின் தொடர்ந்த வரலாற்று நிகழ்ச்சிகள் என்றும் இனிய ராகங்கள் எனலாம்.

2000ஆம் ஆண்டு தொட்டு மஇகா மத்திய செயலவையில் அவரோடு தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட பொழுது ஏற்பட்ட பேரானந்தம் என்றும் சுகமானவை.

பக்கத்தில் அமர்ந்தவர், தேசிய இளைஞர் தலைவராகி பின்பு உதவித் தலைவராகி, நாடாளுமன்றத் தலைவராகி, இன்று மஇகாவின் தலைவராக உயரந்திருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

விடா முயற்சி, விவேகமாகத் திட்டமிடுதல், துணிந்து செயல்படுதல், இந்திய சமுதாய நலன் கருதி முடிவெடுத்தல் ஆகியவற்றோடு கருணை உள்ளம் கொண்டு அரவணைத்தல் என பல முகங்களின் சொந்தக்காரர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் என்பது மறுக்க முடியாத உண்மை என எஸ்.பி.மணிவாசகம் புகழ் மாலை சூட்டினார்.

தேசிய முன்னணியில் ஆக்கப்பூர்வமான பங்காளியாய்த் திகழ்ந்து, பாஸ் கட்சியோடு நேசக்கரம் நீட்டி கை கோர்த்தது அரசியல் அரங்கின் புதிய நாகரிகமாகும்.

ஒரே குடையின் கீழ் எல்லா இந்தியக் கட்சிகளையும் இந்தியர்களையும் மஇகாவிற்குள் அழைத்தது துணிச்சலான முடிவாகும் என எஸ்.பி.மணிவாசகம் குறிப்பிட்டார்.

இந்த முயற்சியில் டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்பது வெள்ளிடை மலை என்று தொடர்ந்து உறுதி கூறினார்.

ஒரு துடிப்பான இளைஞனாக தனது சமுதாயப் பணியை தொடங்கிய டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், நிச்சயமாக ஒரு வெற்றி நாயகனாக கொடி நாட்டுவார் என்பது திண்ணம் என மஇகா முன்னாள் மத்திய செயலவை உறுப்பினருமான எஸ்.பி. மணிவாசகம் அறுதியிட்டுக் கூறினார்.