MIC Youth

திவ்யாநாயகி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்
பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு காவல்துறையில் புகார்

பினாங்கு, மே 22-
சமூக வலைத்தள பதிவினால் திவ்யாநாயகி தூக்கிலிட்டுக் கொண்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சண்முகம், பத்து காவான் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் இளமாறன் மற்றும் இத்தொகுதி இளைஞர் பிரிவின் பொருளாளர் அவிநேஷ் மூவரும் காவல்துறையில் புகார் செய்ததோடு இதுதொடர்பில் காவல்துறையும் இணைய குற்றவியல் துறையும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திவ்யாநாயகி தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விரைந்து விசரணை நடத்த வேண்டும். அதேநேரத்தில் இதை இணைய குற்றவியல் துறையும் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் தங்கள் காவல்துறை புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எதை வேண்டுமானாலும் போடலாம் என்ற நிலையில் திவ்யாநாயகி பணியிடத்தில் செய்திருந்த டிக் டொக் ஒன்று ஜோக்கர் ஒருவன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தவறாக விமர்ச்சிக்கப்பட்டதால் அவமானம் தாங்க முடியாமல் திவ்யாநாயகி வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saudara Shanmugam, Ketua Pemuda MIC Negeri Pulau Pinang bersama Saudara Illamaran, Ketua Pemuda MIC Bahagian Batu Kawan dan Saudara Avinesh, Bendahari Pemuda MIC Bahagian Batu Kawan telah membuat satu laporan polis pada tengah hari tadi berhubung kes kematian Saudari Thivyanayagi akibat “cyber bullying”.

Pemuda MIC Negeri Pulau Pinang mendesak agar pihak Polis dan SKMM menyiasat kes ini dengan kadar segara.

About the author

Editor

Add Comment

Click here to post a comment