Mi-Voice MIC News

தமிழகத்திலிருந்து மேலும் 558 மலேசியர்கள் இன்று தாயகம் திரும்பினர், எஞ்சியுள்ளவர்களையும் அழைத்து வர ம.இ.கா தீவிரம் (வீடியோ பதிவுடன்)

கோலாலம்பூர், மார்ச் 25-  கோவிட் 19 நோய் பரவல் காரணமாக தமிழக விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டிருந்த மேலும் 558 மலேசியர்கள் இன்று காலை சிறப்பு விமானச் சேவைகள் மூலமாக நாடு திரும்பினர். சென்னையிலிருந்து ஒரு ஏர் ஆசியா விமானம் மற்றும் திருச்சியிலிருந்து இரண்டு ஏர் ஆசியா விமானங்கள் அவர்கள் தாயகம் அடைந்தனர்.

இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் செலவினையும் ம.இ.கா ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோலாலும்பூர் விமான நிலையம் வந்தடைந்த மலேசியர்கள், இந்தியாவில் சிக்கியிருந்த காலம் முதல் நாடு திரும்பும் வரை தங்கள் நலன், பாதுகாப்பு, உணவு, தங்கும் வசதி மற்றும் மீட்பு விமானங்கள் என அனைத்து வகைகளிலும் உதவிக்கரம் நல்கிய ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்தியாவில் நாடு திரும்ப இயலாமல் இன்னும் பரிதவித்துக் கொண்டிருக்கும் எஞ்சியுள்ள மலேசியர்களுக்கு உதவும் நடவடிக்கைகளிலும் ம.இ.கா தீவிரம் காட்டி வருகின்றது.

https://www.thesentral.my/2020/03/25/tamil-558strandedmalaysians-returnshome/