Mi-Voice MIC News

கோவிட்-19: ம.இ.கா பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு, அரசு அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை பின்பற்ற வலியுறுத்து

கோலாலும்பூர், மார்ச் 16: கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடு நிபந்தனை மற்றும் சங்கங்களின் பதிவிலாகா விதித்துள்ள கூட்டங்களுக்கான தடை உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் 16.03.2020 முதல் நாட்டிலுள்ள அனைத்து ம.இ.கா கிளைகளின் ஆண்டு பொதுக்கூட்டங்கள் காலவரையின்றி ஒத்திவைக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக ம.இ.காவின் பொதுச் செயலாளர் டத்தோ மு. அசோஜன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்க உத்தரவின்படி அதிகமானோர் திரளும் கட்சி நிகழ்வுகளையும் ஒத்திவைக்கும்படியும் அசோஜன் கேட்டுக் கொண்டார்.

“அரசு அறிவித்திருக்கும் இந்த மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, சற்றே தளர்வானது போன்று இருப்பதாக நினைத்து மெத்தனமாக எடுத்துக்கொண்டால், விளைவு மோசமாகலாம்.”

“சீனாவில் கட்டாய இயல்முடக்கு நிலையால் தான் தற்போது கோவிட்-19 பெருந்தொற்று நோய் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. அனைவரும் வெளிநடமாட்டத்தை உடனே குறைத்து, தேவை ஏற்பட்டால் மட்டுமே செல்ல வேண்டும் என்கிற சுயக்கட்டுப்பாட்டினை கொணர வேண்டும்!” என டத்தோ மு. அசோஜன் அறிவுறுத்தினார்.

http://www.thesentral.my/2020/03/17/tamil-micagms-postponed/