பினாங்குத், நவ.25-
நாட்டு தேர்தலுக்கு பின்னர், ம.இ.கா செத்து விட்டது என்று ஒரு பக்கம் புலம்பல்.
மறுபக்கம் ம.இ.காவை விட்டு பலர் ஓட்டம். இந்நிலையில் ம.இ.கா சாகவில்லை என்று அதற்கு புத்துயிருட்டியவர் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் என்று ம.இ.கா பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ ஞானசேகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அந்த காலக் கட்டத்தில் தைரியமாக மிக துணிவோடு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஷ்வரன், ஓராண்டுக் காலத்திலேயே ம.இ.காவினரை மட்டுமல்லாது, இந்திய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவினை பெற்றவராக திகழ்கிறார்.
சக்திமிக்க ஒரு சமுதாய தலைவராக அவர் மிளிர்கிறார் என டத்தோ மு.ஞானசேகரன் புகழ் மாலை சூட்டி மகிழ்ந்தார்.
ம.இ.கா மாநில மகளிர் பகுதியின் ஏற்பாட்டில் நடந்தேறிய தீபாவளி ஒன்று கூடுதல் நிகழ்வுக்கு தலைமையேற்ற அவர் மேலும் பேசியதாவது:-
ம.இ.காவை கண்டப்படி திட்டித் தீர்க்காத நம் இனத்தவர்களே இல்லை எனலாம்.
தேர்தலுக்கு பின்னர் வெளியே தலையை காட்டக் கூட அச்சப்பட்டிருந்தோம்.
அக்காலக் கட்டத்தில் பலர் ம.இ.காவை விட்டே ஜெயித்த கட்சிக்கு மாறி போயினர்.
ஆனால், கொள்கைப் பிடிப்புள்ள தலைவர்கள் இன்னும் நம்முடனே இருப்பது வரவேற்க்கக்கூடியது என அவர் பெருமிதம் கொண்டார்.
மாநில மகளிர்களை பாராட்டுவதாக கூறிய அவர் தலைவி பிரேமா மற்றும் பொறுப்பாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியினால் இவ்விழா நிறைய மகளிர்களோடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து மகிழ்வதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாநில மற்றும் தொகுதி தலைவர்களோடு கிளை மகளிர்கள் என திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
By Desam -November 26, 2019