Tan Sri Dr S Subramaniam (2014-July 2018)
Tan Sri Dr S Subramaniam became the 9th President of the Malaysian Indian Congress in June 2015. He rose through rank and file in MIC after he had a long and eventful membership since 1968 while in Melaka, his hometown. He took over the helm of leadership from Dato Seri G.Palanivellu in a smooth transition of power.
மதிப்புமிகு தான் ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் அவர்கள் (1914 – 2018)
மலாக்கா மாநிலத்திலுள்ள தனது சொந்த ஊரில், கடந்த 1968ஆம் ஆண்டுமுதல் மஇகாவின் உறுப்பினராக இருந்துவந்த மதிப்புமிகு தான் ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு பொறுப்புகளை ஏற்ற பின்னர், தேசியத் தலைவராக பதவி ஏற்றார். இப்பதவியை ஒரு சுமூகமான முறையில் தனது அதிகார பரிமாற்றத்தை மதிப்புமிகு டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்களின் தலைமைத்துவமிடருந்து ஏற்றுக் கொண்டார்
Datuk Seri G.Palanivel (2010 – 2014)
Datuk Seri G. Palanivel became the 8th President of the Malaysian Indian Congress on 6 December 2010. He rose through rank and file in MIC after he had a long and eventful membership since 1968 while in Penang, his hometown. He took over the helm of leadership from Dato Seri S Samy Vellu in a smooth transition of power.
மதிப்புமிகு டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்கள் (1910 – 2014)
கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மலேசிய இந்தியர் காங்கிரசின் எட்டாவது தேசியத் தலைவராக மதிப்புமிகு டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்கள் பதவி ஏற்றார். பினாங்கு மாநிலத்திலுள்ள தனது சொந்த ஊரிலேயே கடந்த 1968ஆம் ஆண்டு முதல் மஇகாவில் உறுப்பியம் பெற்றதாலும், ஒரு நீண்ட கால உறுப்பினர் என்ற காரணத்தினாலும், அவர் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசியத் தலைவருக்கான தனது அதிகார பரிமாற்றத்தை மதிப்புமிகு துன் சாமிவேலு அவர்களிடமிருந்து சுமூகமாக முறையில் ஏற்றுக் கொண்டார்.
Tun Samy Vellu (1979 – 2010)
Tun Samy Vellu political career began at the age of 23, in 1959, when he and Govindaraj joined the Batu Caves MIC branch. After five years, he was elected Selangor MIC committee member and the head of the party. From 1974 to March 2008 he was a member of the House of Representatives of the Malaysian Parliament and from 1979 to December 2010 he was President of Malaysian Indian Congress and a partner in the ruling National Front Coalition. During this time, from 1978 to 1979 he was Deputy Minister of Local Government and Housing. Then from 1979 to 1989, he was Minister of Works. He then served as Minister of Energy, Telecommunications and Posts from 1989 to 1995. From 1995 to March 2008 he was the Minister of Works.
மதிப்புமிகு துன் சாமிவேலு அவர்கள் (1979 – 2014)
மறைந்த டத்தோ ஜி. கோவிந்தராஜ் கிளையான மஇகா பத்துகேவ்ஸ் கிளையில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்த மதிப்புமிகு துன் சாமிவேலு அவர்கள், தனது 23ஆவது வயதிலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஐந்தாண்டுகளுக்கு பின்னர் மஇகா சிலாங்கூர் மாநிலக் காங்கிரசின் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஏழாவது தேசியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1974ஆம் ஆண்டு மார்ச் மாதல் முதல் 2008ஆம் ஆண்டு வரை மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியதுடன், 1979ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவராகவும், ஆளும் தேசிய முன்னணி கூட்டணியில் பங்காளியாகவும் சேவையாற்றினார். இக்காலக்கட்டத்தில் 1978ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டுவரை உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி துணையமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 1979ஆம் ஆண்டுமுதல் 1989ஆம் ஆண்டுவரை பொதுப்பணி அமைச்சராகவும் பணியாற்றினார். தொடர்ந்து 1989ஆம் ஆண்டுமுதல் 1995ஆம் ஆண்டுவரை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராகவும், பின்னர் 1995ஆம் ஆண்டுமுதல் 2008ஆம் ஆண்டுவரை மீண்டும் பொதுப்பணி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
Tan Sri Manickavasagam (1973-1979)
Tan Sri Dato’V. Manickavasagam sixth President of the party placed the MIC on a strong footing with a seven-story headquarters. He introduced many economic projects.
டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் (1973 – 1979)
கட்சியின் ஆறாவது தலைவராக பதவி வகித்திருந்த டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசம் அவர்கள், மஇகா தலைமையகத்திற்காக ஏழு மாடி கட்டிடத்தை எழுப்பி, மஇகாவிற்கு வலுவானதோர் அடித்தளத்தை ஏற்படுத்தினார். கட்சியில் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
Tun V.T.Sambanthan (1955-1973)
Tun V.T. Sambanthan was one of the signatories of the MERDEKA Agreement. He can be rightly called one of the founding fathers of the nation.
துன் வீ.தி. சம்பந்தன் (1955 – 1973)
மலாயாவின் சுதந்திரப் பிரகடன ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் துன் வீதி. சம்பந்தனும் ஒருவராவார். இவரை தேசிய நிர்மாணிப்புத் தந்தைகளில் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது.
Mr.K.L.Devaser (1951-1955)
In 1954 the MIC under the fourth President Mr. K.L. Devaser became the third partner in the Alliance with UMNO and MCA.
கே. எல். தேவாசர் (1951 – 1955) Mr.K.L.Devaser
மலேசிய இந்தியர் காங்கிரசின் அதன் நான்காவது தேசியத் தலைவராக பதவி வகித்த திரு. தேவாசரின் தலைமைத்துவத்தில் அம்னோ, மசீச ஆகிய கட்சிகளுடன் மூன்றாவது பங்காளித்துவக் கட்சியாக ஆனது.
Mr. K.Ramanathan (1950-1951)
Mr.K Ramanathan served as President for a very short period but continued the party’s non-communal policy.
கே. இராமநாதன் (1950 – 1951)
திரு. கே. இராமநாதன் மிகக் குறுகிய காலமே கட்சியின் தலைவராக சேவையாற்றியவர் என்றாலும், கட்சியின் இனச்சார்பற்றக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றினார்.
Mr. Sardar Budh Singh (1947-1950)
Sardar Budh Singh, the second President of the party , followed the founder’s deep anti-British sentiments.
சர்தார் பூத் சிங் (1947 – 1950)
கட்சியின் அமைப்புத் தலைவரைப் பின்பற்றி, கட்சியின் இரண்டாவது தலைவராக சர்தார் பூத் சிங் பொறுப்பேற்றார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பைத் தந்தவர்.
Mr.John Thivy (1946-1947)
Mr. John Thivy was the founder President of the MIC. His father Louis Thivy was the first Indian to be appointed to the Perak State Council in 1929.
ஜோன் திவி (1946 – 1947)
மலேசிய இந்தியர் காங்கிரஸ் அமைப்பை தோற்றுவித்தவர் ஜோன் தீவி அவர்கள். இவரே அமைப்புத் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். இவரது தந்தை லூயிஸ் தீவி, 1029ஆம் ஆண்டு பேராக் மாநிலக் ஆட்சிக் குழுவின் உறுப்பினராக நியமிககப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.