கோலாலம்பூர்:
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் வெறும் காஃபி குடிப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது.
அனைத்து கட்சிகளின் குரல்களுக்கும் செவிசாய்க்கப்பட வேண்டும் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
கடந்த மாநில தேர்தலின் போது தொகுதி பங்கீட்டுற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
இப் பேச்சுவார்த்தையின் போது மஇகா பல தொகுதிகளை கோரியது. ஆனால் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவுமே இறுதி செய்யப்படவில்லை.
இது மஇகா மட்டும் அல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஏமாற்றம் தான்.
என்னைப் பொறுத்தவரை காஃபி குடிப்பதற்காகவே இந்த தொகுதி பங்கீட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டது என நான் உணர்ந்தேன்.
இந்நிலை நீடிக்கக் கூடாது. குறிப்பாக இதன் காரணமாக கொண்டு நமக்குள் பிளவு ஏற்படக்கூடாது.
அப்படியொரு பிளவை ஏற்படுத்துபவர்களின் எண்ணமும் நிறைவேறக் கூடாது.
தேசிய முன்னணியின் 50ஆவது பொன்விழா கொண்டாட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
கடந்த காலங்களில் கட்சியின் தொகுதித் தலைவராக இருந்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஆனால் இப்போதைய நடைமுறையில் அப்படி ஒரு வாய்ப்பு இறுதி வரை கிடைக்காது.
அதே வேளையில் உறுப்பு கட்சிகளுக்கே தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் தோழமைக் கட்சிகள் தேர்தலுக்கு போஸ்டர் மட்டுமே ஒட்ட முடியும்.
ஆகையால், இதுபோன்ற விவகாரங்களை தேசிய முன்னணி தலைமைத்துவம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.