கோலாலம்பூர், ஜுன் 14 (பெர்னாமா) –– ஆண்டுதோறும் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகள் வந்த பின்னர் பொது பல்கலைக்கழகம், மெட்ரிகுலேஷன் போன்ற உயர் கல்விக் கழகங்களுக்கான வாய்ப்புகள், தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அதுமட்டுமின்றி இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் ஒதுக்கப்படும் இடங்கள்; 2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (UPU SINGLE TIER APPLICATION); வழங்கப்பட்ட துறைகளை மாற்றிக் கொள்ள மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கி உள்ளன.
இது குறித்து, ம.இ.காவின் கல்விப் பிரிவுத் தலைவரும் முன்னாள் கல்வி துணை அமைச்சருமான டத்தோ பி. கமலநாதன் நாளை 14.6.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு பெர்னாமா செய்தியில் விளக்கமளிக்கவிருக்கின்றார்.
தகுதி உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி கழக கதவுகள் திறக்கப்படவேண்டும். காணத் தவறாதீர்கள். பெர்னாமா செய்திகள், அலைவரிசை 502, அனைத்தும் உங்களைப் பற்றியே.
— பெர்னாமா
https://www.bernama.com/tam/news.php?id=1851020#.XuTSKFNAS6Z.whatsapp
Add Comment