‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கெணுமே பிறந்ததில்லை’ – பாரதியார்
காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு – அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு
இலண்டன் ‘அறிவு அறக்கட்டளையின்’ ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவில் சிறப்புரையாற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் உருவான கம்பராமாயணம் இன்றும் உலகெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு பாத்திரமும் வெறும் கதையல்ல காப்பியம்.
10 ஆயிரம் கவிதைகளை முத்தாக எழுதி வைத்த கம்பனை ஆராதிக்க இந்த ஒரு பிறவி போதுமா என்று தெரியவில்லை. ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுள் நிறைந்திருக்கும் கம்பன் அடி போற்றி.
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்