கோலாலம்பூர் :
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கூடுதல் விடுமுறை பெற்றுத் தரும்படி மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் மஇகாவின் உயர்மட்ட தலைவர்களை நாடினர்.
இந்த விடுமுறை நாளை மீண்டும் நிறைவு செய்யும் வகையில், பிறிதொரு நாளில் தங்களது வகுப்புகளை நடத்திக் கொள்வதாகவும் மலேசியத் தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மன்றத் தலைவர் எஸ் எஸ் பாண்டின், மஇகாவின் தேசியத் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்றத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரிடம் மனு ஒன்றினை வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மஇகா தேசியத் தலைவரும், தேசிய துணைத் தலைவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழி கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விடுமுறையை கேட்டுக் பெற்றுத் தரும்படியும் அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மஇகாவைச் சேர்ந்த எம்ஐஇடி, கோப்பிராசி டீடேக் கூட்டுறவுக் கழகமும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்த கூட்டம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது, கோப்டீடேக் செயலாளர் டான்ஸ்ரீ கோ. இராஜு தலைமையில், எம்ஐஇடியின் செயல்முறை அதிகாரி மும்தாஜ் பேகம், கோப் டீடேக் இயக்குநர்களான மதிப்புமிகு டத்தோ வி.எஸ். மோகன், சிவசுப்ரமணியம், தலைமையாசியர் மன்றத்தின் சார்பில் எஸ். எஸ். பாண்டியன், மன்றச் செயலாளர் தமிழரசன், பொருளார் மோகன், மலேசிய இந்திய தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தரையாடலில், அடுத்தாண்டு நாடு தழுவிய இயங்கிவரும் 530 மலேசிய தமிழாசிரியர்களுக்கு ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு நாள் பயிலரங்கம் நடத்துவது குறித்தும், அதன் தொடர்பாக மாநில ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் பள்ளி வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து சந்திப்புக் கூட்டம் நடத்துவது எனவும் இணக்கம் காணப்பட்டது.
தொடர்ந்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
அவர்களை இப்பொழுதே ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், கோப் டீடேக் மூலமாக சேமிப்புத் திட்டத்தையும், எம்ஐஇடி மூலமாக கல்விக் கடன் உதவி மற்றும் உபகாரச் சம்பளங்களை வரிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எவ்வாறு வழங்கி உதவ முடியும் என்பதுக் குறித்தும் விவாதிகப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் முடிக்கி விடுப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்ப்பள்ளியில் பணியாற்றுகின்ற தலைமை ஆசிரியர்க, ஆசிரியர்கள் தங்களது உயர்க்கல்வி தொடர்ந்து தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கும், அவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கி ஊக்குவிக்கவும், அதேவேளையில் அவர்களின் குடும்பச் சுமைகளை குறைக்கும் வகையிலான திட்டங்களும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
Add Comment