Mi-Voice MIC News

வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு விரைந்து கோவிட் 19 தடுப்பூசி தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் சந்திப்பு

கோலாலம்பூர்,ஜூலை 12-
வெளிநாட்டில் உயர்கல்வியை தொடரச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசியை விரைந்து செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட் 19 தொற்றுப் பரவல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் உயர்க்கல்வியை தொடர எந்த நேரத்திலும் வெளிநாடு செல்லலாம் என்பதால் அவர்களுக்கான தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும் என்று தடுப்பூசி ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினை நேரில் சந்தித்த போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் படிப்பை தொடரச் செல்லும் மாணவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதன்வழி இந்திய மாணவர்கள் பிரச்சினை இல்லாமல் வெளிநாடுகளுக்கு மீண்டும் படிக்கச் செல்ல முடியும் என்பதால் இந்திய மாணவர்களுக்கான தடுப்பூசியை விரைந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கோரிக்கையை அமைச்சர் கைரி ஜமாலுடினிடம் முன்வைத்திருந்தார்.

இதனிடையே, ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் கைரி ஜமாலுடின் ஏற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னேடுக்க உறுதியளித்துள்ளதாக ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.

ம.இ.கா முன்வைத்த மூன்று கோரிக்கைகளுக்கு கைரி ஜமாலுடின் வரவேற்பு தெரிவித்தார். வெளிநாட்டில் படிப்பை தொடரவிருக்கும் மாணவர்கள், இந்திய சமுதாய மக்களுக்கான தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்பதோடு அதுகுறித்து விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் சில ஆலோசனைகளையும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கைரி ஜமாலுடினிடம் வழங்கினார்.

நானும் கைரியிடம் நேரடியாக ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதாவது பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து மக்களுக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தேன். அப்போது அவர் தாம் அத்தொகுதிக்கு நேரில் வந்து நிலைமையை கண்டறிவதாகவும் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியதாகவும் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான சிவராஜ் தெரிவித்தார்.

ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைக்கும் தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் கைரி ஜமாலுடின் வரவேற்பு தெரிவித்ததோடு அதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறியதாகவும் டத்தோ சிவராஜ் சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.alaiolinews.com/alaiolinewstamil/?p=4031

About the author

Editor

Add Comment

Click here to post a comment