Mi-Voice MIC News

இந்தியாவில் சிக்கியிருந்த 369 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்; அரசாங்கம், ம.இ.கா உதவிகளை மெச்சினர்

செப்பாங், மார்ச் 22: கோவிட்-19 நோய் பரவலை தொடர்ந்து இந்திய அரசு விதித்த வெளிநாட்டு விமானச் சேவைகளின் தடையின் காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 1519 மலேசியர்களில் முதற்கட்டமாக 369 பேர் மீட்கப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலமாக இன்று காலை தாயகம் வந்தடைந்தனர்.

சென்னையிலிருந்து ஏ.கே10 மற்றும் திருச்சியிலிருந்து ஏ.கே22 என ம.இ.கா ஏற்பாட்டிலான ஏர் ஆசியா விமானங்களில் தலா 186 மற்றும் 183 மலேசியர்கள் நாடு திரும்பினர்.

“நாங்கள் அனைவரும் நாடு திரும்புவதற்கு இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சிறப்பு அனுமதியினைப் பெற நடவடிக்கைகளில் இறங்கிய மலேசிய அரசாங்கத்திற்கு, குறிப்பாக   வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடீன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

‘அதே வேளையில், எங்கள் நிலையில் கவலையும் அக்கறையும் கொண்டு, நாங்கள் நாடு திரும்ப சொந்த முயற்சியிலும் செலவிலும் விமானங்களை ஏற்பாடு செய்த ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களை மனமார வாழ்த்துகிறோம். இந்தியாவில் சிக்குண்டப்போது பாதுகாப்பு, உணவு மற்றும் தங்கும் வசதி என எங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ம.இ.கா துணைத்தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ சரவணன் மேற்கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் என்றும் மறவோம். நன்றி ம.இ.கா!,” என மீட்கப்பட்ட மலேசியர்கள் உணர்ச்சிப்பெருக்கோடு கூறினர்.

அடுத்தக்கட்டமாக, இன்னும் 4 ஏர் ஆசியா மற்றும் 2 மாஸ் விமானங்கள் மூலமாக சென்னை, திருச்சி, மும்பாய் நகரங்களில் சிக்கியிருக்கும் 1100-கும் மேற்பட்ட மலேசியர்கள் மீட்கப்படவுள்ளனர்.

https://www.thesentral.my/2020/03/22/tamil-malaysiansreturnshome-strandedinindia/

About the author

Editor

Add Comment

Click here to post a comment