கோலாலும்பூர், மார்ச் 20: கோவிட் 19 நோய் பரவல் காரணமாக் தமிழக விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டிருக்கும் மலேசியர்களை சிறப்பு விமானச் சேவைகள் மூலமாக மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான செலவை மஇகா ஏற்றுக் கொள்வதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

ஏர் ஆசியாவின் அந்த 6 விமானங்களுக்கான ரிங்கிட் 1.05 மில்லியன் செலவுத் தொகையினை மஇகா ஏற்றுக் கொள்வதற்கான உறுதி கடிதத்தையும் அவர், ஆர் ஆசியாவின் மேம்பாட்டுப் பிரிவு தலைமை இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். தலா 186 பேர் அமரக்கூடிய அந்த 6 விமானங்கள் வாயிலாக 1,100-கும் மேற்பட்ட மலேசியர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்.
”தமிழகத்தில் நாடு திரும்ப இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் நமது மலேசியர்களின் நலனும், பாதுகாப்புமே ம.இ.காவின் முதன்மை நோக்காகும். இது எங்களது பெருமை அல்ல. சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமை,” என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்நடவடிக்கை குறித்து கருத்துரைத்தார்.
https://www.thesentral.my/2020/03/20/tamil-mic-specialflights-malaysians-stranded/
Add Comment